வரலாற்றில் குதிரைகளுக்குமுக்கிய இடம்: பிரதமர் மோடி

தினமலர்  தினமலர்
வரலாற்றில் குதிரைகளுக்குமுக்கிய இடம்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி,-''நாட்டின் வரலாறு மற்றும் கலாசாரத்தில் குதிரைகளுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் மோடி கூறியுள்ளார்.





ஜனாதிபதியின் மெய்க்காவல் படையில் ௨௦௦௩ல் 'விராட்' என்ற குதிரை சேர்க்கப்பட்டது.கவுரவிப்புமிக சிறப்பாக பணியாற்றிய விராட், ௧௩ குடியரசு தின பேரணியில் பங்கேற்றது. இந்த ஆண்டு நடந்த குடியரசு தின பேரணியுடன் பணியிலிருந்து விராட் ஓய்வு பெற்றது.குடியரசு தின பேரணியில் பங்கேற்ற பிரதமர் மோடி, விராட் குதிரையின் முகத்தில் தட்டி விடைக் கொடுத்தார். இதற்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சோதி எழுதிய கடிதத்தில், 'விராட் குதிரையின் சேவையை பாராட்டி நீங்கள் கவுரவித்தது, குடியரசு தின பேரணியை மறக்க முடியாத நிகழ்வாக்கி விட்டது' என, குறிப்பிட்டிருந்தார்.



முக்கிய இடம்

இதற்கு பதில் அளித்து, அவருக்கு பிரதமர் எழுதிய கடிதத்தில் கூறியிருந்ததாவது:நம் நாட்டின் பாரம்பரியமிக்க வரலாற்றிலும், கலாசாரத்திலும், குதிரைளுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரை, சூரிய பகவான் ஓட்டி வருவதாக நம் புராணங்கள் தெரிவிக்கின்றன. முகலாயர்களை எதிர்த்து போராடிய மஹாராணா பிரதாப், சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி லட்சுமி பாய் ஆகியோருக்கும், குதிரைகளுக்கும் இடையே பிரிக்க முடியாத உறவு இருந்தது. நம் ராணுவத்திலும், குதிரைகள் மிக சிறப்பான சேவைகளை செய்து வருகின்றன.இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடில்லி,-''நாட்டின் வரலாறு மற்றும் கலாசாரத்தில் குதிரைகளுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் மோடி கூறியுள்ளார். nsimg3035901nsimg ஜனாதிபதியின் மெய்க்காவல் படையில் ௨௦௦௩ல்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை