விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்!

தினமலர்  தினமலர்
விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் 'விடுதலை' திரைப்படம் இந்திய மொழிகளில் வெளியாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் மேலும் பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், சேத்தன் ஆகியோர் நடித்துள்ளனர். இளையராஜா இந்த படத்திற்கு இசைஅமைக்கிறார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சிறுமலையின் மேலே மலைகளில் ஒரு பெரிய கிராமப்புற செட் அமைக்கப்பட்டுள்ளது. சண்டைக்காட்சியில் விஜய் சேதுபதி டூப் இல்லாமல் தானே நேரடியாக நடித்துவருகிறார் என கூறப்படுகிறது .

கடந்த 50 நாட்களாக இப்படத்தினை சார்ந்த 450 படக்குழுவினர் சிறுமலை மலைப்பகுதியில் தங்கியுள்ளனர். விஷப்பாம்புகள், காட்டெருமைகள், காட்டு நாய்கள் மற்றும் பூச்சிகளை கடந்து குழுவினர்கள் வனப்பகுதிக்குள் தொலைதூர இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதால், படப்பிடிப்பின் போது, ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் மருத்துவ உதவியை வழங்க வேண்டும் என்பதற்காக மருத்துவருடன் கூடிய ஆம்புலன்ஸ் அங்கு இருப்பதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

மூலக்கதை