சீரியலில் இருந்து விலகிய சாயா சிங்! ரசிகர்கள் வருத்தம்

தினமலர்  தினமலர்
சீரியலில் இருந்து விலகிய சாயா சிங்! ரசிகர்கள் வருத்தம்

நடிகை சாயா சிங் சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு வந்துள்ளார். இவரது நடிப்பிற்கு சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சாயா சிங் தற்போது 'பூவே உனக்காக' மற்றும் கலர்ஸ் தமிழ் சேனலின் 'நம்ம மதுர சிஸ்டர்ஸ்' ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். அதிலும், நம்ம மதுர சிஸ்டர்ஸ் தொடரின் கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய லீட் கதாபாத்திரமே சாயா சிங் தான். ஆனால், சாயா சிங் தற்போது 'நம்ம மதுர சிஸ்டர்ஸ்' தொடரிலிருந்து விலகிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அவர் எதற்காக விலகினார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. சாயாசிங்கிற்கு பதிலாக ஸ்ருதி லெக்ஷிமி என்ற நடிகை இனி இந்திராணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

மூலக்கதை