பாலியல் புகார்!: பிரபல மலையாள நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தது ஒன்றிய வெளியுறவுத்துறை..!!

தினகரன்  தினகரன்
பாலியல் புகார்!: பிரபல மலையாள நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தது ஒன்றிய வெளியுறவுத்துறை..!!

திருவனந்தபுரம்: பிரபல மலையாள திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது. நடிகர் விஜய் பாபு தயாரித்த படங்களில் நடித்த இளம் நடிகை ஒருவர் கடந்த ஏப்ரல் 22ம் தேதி கேரள காவல்துறையில் புகார் அளித்தார். அதில் விஜய் பாபு தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக தெரிவித்ததுடன் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கையும் விடுத்திருந்தார். இதையடுத்து பிரபல மலையாள தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கேரள காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், விஜய் பாபு, அரபு நாடு ஒன்றுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை மத்திய வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது. சர்வதேச காவல்துறையின் உதவியுடன் விஜய் பாபுவை கைது செய்து இந்தியா கொண்டுவர காவல்துறை முயற்சி மேற்கொண்டுள்ளார்கள். 

மூலக்கதை