ஆர்ச்சர் மீண்டும் காயம்

தினகரன்  தினகரன்
ஆர்ச்சர் மீண்டும் காயம்

இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் (27 வயது), கீழ் முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக 2022 சீசன் முழுவதும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முழங்கை காயத்துக்காக 2 முறை அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் கடந்த ஆண்டு ஜூலையில் இருந்து ஓய்வெடுத்து வரும் ஆர்ச்சருக்கு இது மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது. முழு உடல்தகுதியுடன் இந்த மாதம் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் வலைப்பயிற்சியின்போது மீண்டும் காயம் அடைந்துள்ளார். இதனால், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை டி20 தொடரிலும் ஆர்ச்சர் களமிறங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை