ஆர்சிபி அணிக்கு எதிராக ஹர்திக் அரை சதம் விளாசல்

தினகரன்  தினகரன்
ஆர்சிபி அணிக்கு எதிராக ஹர்திக் அரை சதம் விளாசல்

மும்பை: பெங்களூர் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், குஜராத் அணி கேப்டன் ஹர்திக் அரை சதம் அடித்தார். வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட் செய்தது. சாஹா, கில் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். கில் 1 ரன், மேத்யூ வேட் 16 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, சாஹா 31 ரன் எடுத்து ரன் அவுட்டானார். கேப்டன் ஹர்திக் - மில்லர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்தது.மில்லர் 34 ரன் (25 பந்து, 3 சிக்சர்), திவாதியா 2 ரன் எடுத்து வெளியேறினர். உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் அரை சதம் அடித்தார். குஜராத் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன் குவித்தது. ஹர்திக் 62 ரன் (47 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ரஷித் 19 ரன்னுடன் (6 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 20 ஓவரில் 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது.

மூலக்கதை