விஜய் 66 : மனோபாலா வெளியிட்ட மறுப்பு செய்தி

தினமலர்  தினமலர்
விஜய் 66 : மனோபாலா வெளியிட்ட மறுப்பு செய்தி

இயக்குனர் மனோபாலா பல படங்களிலும் காமெடியனாக நடித்து வருகிறார். தற்போது சரத்குமார், தயாரிப்பாளர்கள் தேனப்பனுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதில் சரத்குமாரும், தேனப்பனின் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் அமர்ந்திருக்க அவர்கள் அருகில் மனோபாலா சாதாரண உடையில் அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் வெளியானதையடுத்து விஜய்யின் 66வது படத்தில் சரத்குமாரும் தேனப்பனும் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக ஒரு செய்தி பரவ தொடங்கியது. அதையடுத்து உடனடியாக இந்த தகவலை மறுத்து ஒரு பதிவு போட்டுள்ளார் மனோபாலா. அதில் சரத்குமார், தயாரிப்பாளர் தேனப்பனுடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படம் விஜய் 66வது படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டதல்ல. இது வேறு படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிவித்துள்ள மனோபாலா, தான் விஜய் படத்தில் நடிக்க வில்லை என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மூலக்கதை