உலகின் பெரிய நிறுவனங்கள் 53வது இடத்தில் ‘ரிலையன்ஸ்’

தினமலர்  தினமலர்
உலகின் பெரிய நிறுவனங்கள் 53வது இடத்தில் ‘ரிலையன்ஸ்’

புதுடில்லி:‘போர்ப்ஸ்’ நிறுவனம் தொகுத்து வெளியிட்டு உள்ள, உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் பட்டியலில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ 53வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது.
போர்ப்ஸ் நிறுவனம், உலகின் மிகப் பெரிய 2,000 நிறுவனங்களை, அவற்றின் விற்பனை, லாபம், சொத்து, சந்தை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி, ‘போர்ப்ஸ் குளோபல் 2000’ எனும் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில், இந்த ஆண்டு வெளியான பட்டியலில், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டு இடங்கள் முன்னேறி, 53வது இடத்துக்கு வந்துள்ளது.
மேலும், இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில், முதல் இடத்தையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.இந்தியாவை பொறுத்தவரை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை அடுத்து, 105வது இடத்தில் எஸ்.பி.ஐ., உள்ளது. 153 வது இடத்தில் எச்.டி.எப்.சி., வங்கியும், 204வது இடத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியும் உள்ளன.
‘அதானி எண்டர்பிரைசஸ்’ 1,453 இடத்தில் உள்ளது. அதானி நிறுவனங்கள் தனித்தனியாக இருப்பதால், அவை 1,500 வது இடங்களை தாண்டியே இடம்பெற்றுள்ளன.‘வேதாந்தா’ நிறுவனம், 703 இடங்களை தாண்டி, 593 இடத்தை பிடித்து, இம்முறை சாதனை படைத்துள்ளது.

மூலக்கதை