‘ஏசி, டிவி’ விலை உயரும்

தினமலர்  தினமலர்
‘ஏசி, டிவி’ விலை உயரும்

புதுடில்லி:வீட்டு உபயோக சாதனங்களான வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர், ‘ஏசி, டிவி’ போன்றவற்றின் தயாரிப்பு செலவு அதிகரிப்பதால், அவற்றின் விலை, 3 முதல் 5 சதவீதம் வரை உயரக்கூடும் என இத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உள்ளீட்டுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன், தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சற்று சரிவைக் கண்டு வருகிறது. இதனால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்த இடர்களுக்கு மத்தியில், சீனாவில் தொற்று அதிகரிப்பதால், அங்கு பல இடங்களில் கடுமையான தடை விதிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, ஷாங்காய் துறைமுகத்தில் கன்டெய்னர்கள் தேங்கி நிற்கின்றன. இதன் காரணமாக, தயாரிப்பு செலவு அதிகரிக்கிறது. இந்த செலவை ஈடுகட்டும் வகையில், இம்மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் விலையை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாக, நுகர்வோர் மின்னணு மற்றும் சாதனங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை