தொடரும் தோனி ஆட்டம் * கவாஸ்கர் கணிப்பு | மே 13, 2022

தினமலர்  தினமலர்
தொடரும் தோனி ஆட்டம் * கவாஸ்கர் கணிப்பு | மே 13, 2022

மும்பை: ‘‘சென்னை அணிக்காக தோனி அடுத்த ஆண்டும் விளையாடுவார்,’’ என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சென்னை அணி கேப்டன் தோனி 40. ‘டி–20’ லீக் தொடரில் 2010, 2011, 2018, 2021 என நான்கு முறை கோப்பை வென்று தந்தார். 14வது சீசனில் (2021) சென்னை கோப்பை வென்ற போதும், தோனி 16 போட்டியில் 114 ரன் மட்டும் எடுத்தார். இதனால் இவர் மீண்டும் விளையாடுவாரா என சந்தேகம் ஏற்பட்டது.

இதற்கேற்ப 15வது சீசனில் ஜடேஜா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். மறுபக்கம் பேட்டிங்கில் எழுச்சி பெற்ற தோனி, இதுவரை 12 போட்டியில் 199 ரன் எடுத்துள்ளார். தவிர, தொடர் தோல்வி காரணமாக ஜடேஜா விலக, தோனி மீண்டும் கேப்டன் ஆனார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் 72, கூறியது:

தோனி விளையாடும் விதத்தை பார்த்தால், கிரிக்கெட் மீது குறையாத ஆர்வத்துடனும் உள்ளது நன்கு தெரிகிறது. ஆடுகளத்தில் விக்கெட்டுகளுக்கு இடையே வழக்கமான வேகத்துடன் ஓடுகிறார். அணியில் 2 அல்லது 3 விக்கெட்டுகள் சரிந்தால் பொறுப்பாக விளையாட வேண்டும் என்பதை உணர்ந்து கொள்கிறார். தோனி 2023 தொடரிலும் கட்டாயம் விளையாடுவார் எனத் தெரிகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை