பஞ்சாப் ‘ஸ்டார்’ பேர்ஸ்டோவ்: கிடைத்தது ஆறாவது வெற்றி | மே 13, 2022

தினமலர்  தினமலர்
பஞ்சாப் ‘ஸ்டார்’ பேர்ஸ்டோவ்: கிடைத்தது ஆறாவது வெற்றி | மே 13, 2022

மும்பை: பெங்களூருவுக்கு எதிரான ‘டி–20’ கிரிக்கெட் லீக் போட்டியில் ‘ஸ்டாராக’ ஜொலித்த பேர்ஸ்டோவ், லிவிங்ஸ்டன் அரைசதம் விளாச, பஞ்சாப் அணி 54 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை, பிரபோர்ன் மைதானத்தில் நடந்த ‘டி–20’ கிரிக்கெட் லீக் போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின. பெங்களூரு அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியில் சந்தீப் சர்மாவுக்கு பதிலாக ஹர்பிரீத் பிரார் சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் டுபிளசி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

பேர்ஸ்டோவ் விளாசல்: பஞ்சாப் அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ், ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. மேக்ஸ்வெல் வீசிய முதல் ஓவரில் ஒரு சிக்சர் அடித்த பேர்ஸ்டோவ், ஹேசல்வுட் வீசிய இரண்டாவது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாச 22 ரன் கிடைத்தன. முகமது சிராஜ், ஹேசல்வுட் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த தவான், மேக்ஸ்வெல் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். தொடர்ந்து அசத்திய பேர்ஸ்டோவ், சிராஜ் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். முதல் விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்த போது மேக்ஸ்வெல் ‘சுழலில்’ தவான் (21) போல்டானார்.

 

லிலிங்ஸ்டன் நம்பிக்கை: சிராஜ் வீசிய 6வது ஓவரில் ஒரு பவுண்டரி, 3 சிக்சர் விளாசிய பேர்ஸ்டோவ், ஐ.பி.எல்., அரங்கில் தனது 9வது அரைசதம் கடந்தார். பானுகா ராஜபக்சா (1) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய பேர்ஸ்டோவ், 29 பந்தில் 66 ரன் (7 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்து அவுட்டானார். ஷாபாஸ் அகமது வீசிய 12வது ஓவரில் லியாம் லிவிங்ஸ்டன் ஒரு சிக்சர், கேப்டன் மயங்க் அகர்வால் ஒரு பவுண்டரி அடிக்க 15 ரன் கிடைத்தன. பொறுப்பாக ஆடிய லிவிங்ஸ்டன், ஷாபாஸ் அகமது வீசிய 14வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.

 

ஹர்ஷல் கலக்கல்: ஹர்ஷல் படேல் வீசிய 15வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய அகர்வால் (19), கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ஹேசல்வுட் வீசிய 16வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசிய ஜிதேஷ் சர்மா (9), ஹசரங்கா பந்தில் போல்டானார். ஹர்ஷல் வீசிய 18வது ஓவரின் 2வது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ஹர்பிரீத் பிரார் (7), அடுத்த பந்தில் அவுட்டானார். இந்த ஓவரின் கடைசி பந்தில் ரிஷி தவான், ஒரு சிக்சர் அடித்தார்.
 

ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய லிவிங்ஸ்டன், தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். இவர், 70 ரன்னில் (4 சிக்சர், 5 பவுண்டரி) அவுட்டானார். ரிஷி தவான் (7), ராகுல் சகார் (2) ஏமாற்றினர். பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்தது. பெங்களூரு சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட் வீழ்த்தினார்.

 

 

பின் இணைந்த ரஜத் படிதர் (26), மேக்ஸ்வெல் (35) ஓரளவு கைகொடுத்தனர். தினேஷ் கார்த்திக் (11) சோபிக்கவில்லை. ரபாடா பந்தில் ஷாபாஸ் அகமது (9), ஹர்ஷல் படேல் (11) அவுட்டாகினர். ராகுல் சகாரிடம் ஹசரங்கா (1) சிக்கினார். பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. சிராஜ் (9), ஹேசல்வுட் (7) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் சார்பில் ரபாடா 3 விக்கெட் சாய்த்தார்.

 

ஆறாவது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் அணி, 12 புள்ளிகளுடன் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

அபாரமாக ஆடிய பேர்ஸ்டோவ், 21 பந்தில் அரைசதம் விளாசினார். இது, ஐ.பி.எல்., அரங்கில் இவரது அதிகவே அரைசதம் ஆனது. இதற்கு முன், மூன்று முறை (2019ல் எதிர்: பெங்களூரு, கோல்கட்டா, 2020ல் எதிர்: பஞ்சாப்) தலா 28 பந்தில் அரைசதம் அடித்திருந்தார்.

 

ஏழாவது முறை

பவுலிங்கில் ஏமாற்றிய பெங்களூரு அணி, இந்த சீசனில் 7வது முறையாக எதிரணியின் துவக்க ஜோடியை 50 அல்லது அதற்கு மேல் ரன் சேர்க்க விட்டது. அடுத்த இடத்தில் மும்பை அணி (5 முறை) உள்ளது. சென்னை, டில்லி அணிகள் தலா 4 முறை இப்படி ஏமாற்றின.

 

100வது போட்டி

பெங்களூரு வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், நேற்று தனது 100வது ‘டி–20’ போட்டியில் விளையாடினார். இதுவரை 100 போட்டியில், 116 விக்கெட் சாய்த்துள்ளார்.

 

23 விக்கெட்

பஞ்சாப் வீரர் ஜிதேஷ் சர்மாவை அவுட்டாக்கிய பெங்களூருவின் ஹசரங்கா, இந்த சீசனில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தை ராஜஸ்தானின் யுவேந்திர சகாலுடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் தலா 23 விக்கெட் சாய்த்துள்ளனர். அடுத்த இரு இடத்தில் ரபாடா (பஞ்சாப்), குல்தீப் யாதவ் (டில்லி) தலா 18 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.

 

64 ரன்

‘வேகத்தில்’ ஏமாற்றிய பெங்களூரு அணியின் ஹேசல்வுட், 4 ஓவரில், 64 ரன் விட்டுக் கொடுத்தார். இது, ஐ.பி.எல்., அரங்கில் இவரது மோசமான பந்துவீச்சானது. கடந்த சீசனில் ராஜஸ்தானுக்கு எதிராக 54 ரன் வழங்கினார்.

மூலக்கதை