வரும் 19ல் பா.ஜ., கூட்டம் மூத்த தலைவர்கள் பங்கேற்பு

தினமலர்  தினமலர்
வரும் 19ல் பா.ஜ., கூட்டம் மூத்த தலைவர்கள் பங்கேற்பு

பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடக்கும் உயர்மட்டக்குழு கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்கிறார்.
காங்., கட்சியைப் பலப்படுத்த, ராஜஸ்தானின் உதய்பூரில் சிந்தனையாளர் கூட்டம் நடந்து வருகிறது.

'வீடியோ கான்பரன்ஸ்'



இங்கு, கட்சித் தலைவர் சோனியா தலைமையில், மூத்த தலைவர்கள் ஆலோசித்து வரும் நிலையில், இங்கிருந்து, 400 கி.மீ., தொலைவில் உள்ள ஜெய்ப்பூரில், பா.ஜ.,வும் தன்
பங்கிற்கு, ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளது.வரும் 19, 20, மற்றும் 21 தேதிகளில், பா.ஜ., தேசியத் தலைவர் நட்டா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தேசிய அளவிலான அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்கவுள்ளனர்.
இதில் பா.ஜ., மூத்த தலைவர்களான, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி மூவரும் பங்கேற்கின்றனர். டில்லியில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடியும் உரையாற்ற உள்ளார்.

முக்கிய முடிவு



மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத், ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள், நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இக்கூட்டத்தில் இத்தேர்தலுக்கான பணிகள் குறித்தும், 2024 லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்தும், மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது டில்லி நிருபர் -

பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடக்கும் உயர்மட்டக்குழு கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்கிறார்.காங்., கட்சியைப்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை