தெலுங்கில் ஹீரோயின் ஆன கவுரி கிஷன்

தினமலர்  தினமலர்
தெலுங்கில் ஹீரோயின் ஆன கவுரி கிஷன்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் மகள் சுஷ்மா கொனிடேலா. சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ளார். சிரஞ்சீவி தயாரிக்கும் படங்களின் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் சுஷ்மா படத் தயாரிப்பில் இறங்கி உள்ளார். படத்தின் தலைப்பு 'ஸ்ரீதேவி ஷோபன்பாபு'. இதனை புதுமுக இயக்குனர் பிரசாந்த் குமார் திம்மாலா இயக்குகிறார், இப்படத்தில் சந்தோஷ் ஷோபன், ஷோபன் பாபுவாகவும் கவுரி கிஷன் ஸ்ரீதேவியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாகபாபு, ரோகினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கம்ரன் இசையமைத்துள்ளார். இளம் காதலர்களுக்கு இடையிலான ஈகோ மோதல் பற்றிய காமெடி படம்.

96 படத்தில் இளம் வயது த்ரிஷாவாக நடித்த கவுரி கிஷன் அந்த படம் தெலுங்கில் ஷானு என்ற பெயரில் ரீமேக் ஆனபோது அதிலும் இதே கேரக்டரில் நடித்தார். தற்போது இந்த படத்தின் மூலம் முழுமையான ஹீரோயின் ஆகியிருக்கிறார்.

மூலக்கதை