அப்பா பெயரை இணைத்துக் கொண்டது ஏன்? சிபி சத்யராஜ் விளக்கம்

தினமலர்  தினமலர்
அப்பா பெயரை இணைத்துக் கொண்டது ஏன்? சிபி சத்யராஜ் விளக்கம்

சிபி சத்யராஜ் நடித்துள்ள ரங்கா படம் இன்று வெளியாகிறது. நிகிலா விமல் ஹீரோயின். சதீஷ், ஷாரா, மனோபாலா, மோனிஷ் ரஹேஜா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். டி.எல்.வினோத் இயக்கி உள்ளார்.

படம் பற்றி சிபி அளித்த பேட்டி வருமாறு: திருமணமான புதிய தம்பதிகள் குளுமனாலிக்கு தேனிலவு செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அதில் இருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை சொல்லும் ஆக்ஷன் படம். இது வரை நான் நடித்த படங்களில் இதில் தான் ஆக்ஷன் காட்சிகள் அதிகம். பெரும்பகுதி படப்பிடிப்பு குளுமனாலி மற்றும் காஷ்மீரில் நடந்தது.

எனது பெயரை சிபி சத்யராஜ் என்று மாற்றியது ஏன் என்று கேட்கிறார்கள். எல்லாமே ஒரு சுயநலம் தான். சினிமாவில் அறிமுகமாகும்போது சிபி என்று தான் அறிமுகமானேன். இன்னாருடைய மகன் என்று தெரிய வேண்டும் என்பதற்காக சிபிராஜ் என்று வைத்துக் கொண்டேன். பாகுபலி படத்திற்கு பிறகு அப்பா இந்திய அளவில் பிரபலமாகி விட்டார். எல்லா மொழி படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதனால் என்னோட பெயரும் எல்லா மொழி ரசிகர்களுக்கும் தெரியட்டும் என்று சிபி சத்யராஜ் என்று மாற்றிக் கொண்டேன். என்றார்.

மூலக்கதை