‛‛தீப்பிடிக்க தீப்பிடிக்க'' திருமணம் செய்த தம்பதி: வீடியோ வைரல்

தினமலர்  தினமலர்
‛‛தீப்பிடிக்க தீப்பிடிக்க திருமணம் செய்த தம்பதி: வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: திரைப்படங்களில் வருவதுபோல உடலில் தீப்பற்றி எரிய திருமண வரவேற்பு நடத்திய தம்பதிகளின் செயலால் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

இப்போதெல்லாம் திருமணத்தை பலரும் விதவிதமாக நடத்தி ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். ஆகாயத்தில், கடலடியில் என திருமணத்தை ரசித்து புதுவிதமாக கொண்டாடுவது இயல்பாகி வருகிறது. அந்த வகையில் ஒரு தம்பதி, அனைவரையும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியப்படும் வகையில் திருமணம் செய்துள்ளனர். ஹாலிவுட் திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சி கலைஞர்களான (ஸ்டன்ட் மாஸ்டர்கள்) கேபே ஜெசாப் மற்றும் அம்பியர் ஆகிய இருவரும் திருமண வரவேற்பை நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி, திரைப்படங்களில் ஹீரோக்கள் நெருப்புடன் வருவது போன்ற காட்சியை போல, தாங்களும் உடலின் பின்புறம் தீப்படிக்க, தம்பதிகள் ஸ்டைலாக வருகின்றனர். பின்னர் தீ அணைக்கப்படுகிறது. ‛ஸ்டன்ட் மாஸ்டர்கள் திருமணம் செய்யும்போது' என சமூக வலைதளத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளனர்.
இந்த சம்பவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என நெருப்புடன் திருமண வரவேற்பை நடத்திய இந்த தம்பதிகளின் செயலை சிலர் வரவேற்றும், விமர்சித்தும் வருகின்றனர்.

வாஷிங்டன்: திரைப்படங்களில் வருவதுபோல உடலில் தீப்பற்றி எரிய திருமண வரவேற்பு நடத்திய தம்பதிகளின் செயலால் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.இப்போதெல்லாம் திருமணத்தை பலரும் விதவிதமாக நடத்தி

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை