தொடர்ந்து 25வது வெற்றி'

தினகரன்  தினகரன்
தொடர்ந்து 25வது வெற்றி

இத்தாலி சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நேற்று போலாந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (முதல் ரேங்க்) ஒரு மணி 55 நிமிடங்களில் 6-4, 6-1 என நேர் செட்களில் ரஷ்யாவின் விக்டோரியா அசரென்காவை(16வது ரேங்க்) வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் ஸ்வியாடெக் தொடர்ந்து 25வது வெற்றியை பதிவு செய்துள்ளார். தோஹா, இந்தியன்வெல்ஸ், மியாமி, பிஜேகே, ஸ்டூட்கார்ட் டென்னிஸ் போட்டிகளில் தொடர்ந்து வெற்றியை சுவைத்துள்ளார். இத்தாலி டென்னிசில் அரினா சபலென்கா(பெலாரஸ்), ஜில் டெய்க்மன்(சுவிட்சர்லாந்து), பியான்கா ஆண்ட்ரீஸ்கு(கனடா) ஆகியோரும் நேற்று காலிறுதிக்கு முன்னேறினர்.

மூலக்கதை