இங்கிலீஷ் பிரிமீயர் லீக் நடப்பு சாம்பியன் வெற்றி

தினகரன்  தினகரன்
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் நடப்பு சாம்பியன் வெற்றி

வோல்வர்ஹாம்டன்: இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த 36வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி, வோல்வஸ் அணிகள் மோதின. நடப்பு சாம்பியனுக்கு உரிய வேகத்துடன் விளையாடிய  மான்செஸ்டர் வீரர்கள் ஆட்டத்தை பெரும்பாலும் தங்கள் வசமே வைத்திருந்தனர். அதன் பலனாக அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். அதனால் ஆட்ட நேர முடிவில் 5-1என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி வெற்றிப் பெற்றது. அந்த அணியின் கெவின் டி புரூய்ன் 7, 16, 24, 60 நிமிடங்களில்  என 4 கோல்களை அடித்து அசத்தினார். கூடவே ரகீம் ஸ்டெர்லிங் 84வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். வோல்வ்ஸ் அணியின் லியாண்டர் டென்டோணகெர் 11வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இந்த 26வது வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில்  89புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. இன்னும் தலா 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் 2வது இடத்தில் உள்ள லிவர்பூல் 86 புள்ளிகளுடன் இருக்கிறது. அந்த 2 ஆட்டங்கள் இந்த ஆண்டு யார் சாம்பியன் என்பதை முடிவு செய்யும். கெவின் பரிசு: இந்தப்போட்டியில் வெற்றிப் பெற்றால் தன் பிள்ளைகளுக்கு பந்து வாங்கிவருவதாக கெவின் டி புரூய்ன் வாக்குறுதி தந்துள்ளார். அதற்கேற்ப 4 கோல்களை அடித்து அணியை வெற்றிப்பெற செய்த கெவின், ‘ 4 கோல்கள், 3 புள்ளிகள் எனவே என் பிள்ளைகளுக்கு புதுப்பந்து (கிடைத்தது)’ சமூக ஊடகத்தில் உற்சாகமாக குறிப்பிட்டுள்ளார். கூடவே போட்டி முடிந்ததும் நடுவர்களிடமிருந்து வாங்கிய பந்துடன் உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மூலக்கதை