ரவிந்திர ஜடேஜா விலகல் | மே 11, 2022

தினமலர்  தினமலர்
ரவிந்திர ஜடேஜா விலகல் | மே 11, 2022

மும்பை: ‘டி–20’ கிரிக்கெட் லீக் தொடரில் இருந்து காயம் காரணமாக சென்னை வீரர் ஜடேஜா விலகினார்.

சென்னை அணியின் ‘ஆல்–ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா 33. இந்தியாவில் நடக்கும் ‘டி–20’ கிரிக்கெட் லீக் 15வது சீசனுக்கு சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இவரது தலைமையில் களமிறங்கிய சென்னை அணி முதல் 8 போட்டியில், 2ல் மட்டும் வெற்றி பெற்றதால், கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

 

சமீபத்தில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற போது ஜடேஜாவின் விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர், டில்லி அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் ஜடேஜா, மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகினார். இம்முறை பங்கேற்ற 10 போட்டியில், பேட்டிங்கில் 116 ரன் எடுத்த இவர், பவுலிங்கில் 5 விக்கெட் வீழ்த்தினார்.

மூலக்கதை