தண்டவாள சீரமைப்பு பணிக்கு பின் விபத்து பகுதியை கடந்த வந்தே பாரத்!

தினமலர்  தினமலர்
தண்டவாள சீரமைப்பு பணிக்கு பின் விபத்து பகுதியை கடந்த வந்தே பாரத்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பாலசோர்: ஒடிசாவில் நடந்த விபத்துக்குப் பின், தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது. ஹவுரா - புரி வந்தே பாரத் ரயில், நேற்று விபத்து பகுதியை கடந்து சென்றது.

ஒடிசா மாநிலம் பாலசோரில், 2ம் தேதி, மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாயின. இதில், 275 பயணிர் பலியாகினர். 1,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்தில் தண்டவாளம், மின்சார கேபிள் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் இரவு பகலாக போர்க்கால அடிப்படையில் நடந்தன. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்து பகுதியிலேயே முகாமிட்டு சீரமைப்பு பணிகளை முடுக்கி விட்டார்.

சேதமடைந்த மூன்று வழித்தடங்களிலும், நேற்று முன்தினம் இரவில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து ரயில் போக்குவரத்து நேற்று மீண்டும் துவங்கியது. விபத்து பகுதியை ரயில்கள் மிக மெதுவாக கடந்து சென்றன.

ஹவுரா - புரி இடையேயான வந்தே பாரத் ரயில் தான், விபத்துக்குப் பின், அந்த பகுதியை முதலில் கடந்து சென்ற அதிவேக ரயில். இந்த ரயில், நேற்று காலை, 9:30க்கு கடந்து சென்றது. இதைத் தொடர்ந்து புவனேஸ்வர் - புதுடில்லி சம்பர்க் கிராந்தி எக்பிரஸ் உள்ளிட்ட மற்ற பயணியர் ரயில்கள் இந்த பகுதியை கடந்து சென்றன.

விசாரணை துவக்கம்:


விபத்து நடந்த இடத்துக்கு நேற்று வந்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சைலேஷ் குமார் பதக், தன் விசாரணையை துவக்கினார். அங்கு பணியாற்றிய ஊழியர்கள், அதிகாரிகள், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம், அவர் விசாரணை நடத்தினார். பஹாநகர் ரயில்வே ஸ்டேனுஷக்கு வந்த பாதுகாப்பு ஆணையர், கட்டுப்பாட்டு அறை, சிக்னல் அறை ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர் குணாநிதி மொஹந்தி, அவரது உதவியாளர் ஹஜாரி பெரா ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இங்கு வந்த பாதுகாப்பு ஆணையர், இருவரிடமும் விசாரணை நடத்தி, அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

டிரைவர், தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், அவரது உதவியாளர், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். நடந்த விபத்துக்கு ரயில் டிரைவர்கள் காரணம் இல்லை என ஏற்கனவே ரயில்வே வாரியம் தெளிவு படுத்தி விட்டது.

ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:ரயில் விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பதை மத்திய அரசு தெளிவு படுத்த வேண்டும். விபத்து குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. குற்ற வழக்குகளை தான் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். ரயில்வே விபத்து வழக்கை சி.பி.ஐ., ஏன் விசாரிக்க வேண்டும்.

ரயில்வே துறையில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன். இதற்கு முன் நடந்த ரயில் விபத்துக்களை சுட்டிக்காட்டி, 'சிக்னல்' தொழில்நுட்பத்தை சரி செய்ய வேண்டும் என ரயில்வேயின் தென்மேற்கு பிராந்திய அதிகாரி அறிக்கை அளித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன். பயணியரின் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாலசோர்: ஒடிசாவில் நடந்த விபத்துக்குப் பின், தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது. ஹவுரா - புரி வந்தே பாரத் ரயில், நேற்று விபத்து பகுதியை கடந்து

மூலக்கதை