நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பரிதாப பலி

தினமலர்  தினமலர்
நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பரிதாப பலி

பீஜிங் : சீனாவில் சுரங்கத் தொழிலாளர்கள் தங்குமிடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பலியாகினர்.

நம் அண்டை நாடான சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் உள்ள மலையடிவாரத்தில் தனியார் சுரங்க நிறுவனத்தின் தொழிலாளர் தங்கும் விடுதி உள்ளது. இங்கு தொடர் மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கத் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதி உட்பட பல்வேறு கட்டடங்கள் குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. இங்கு வசித்த மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கித் தவித்தனர்.

தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளில் சிக்கி இருந்த 19 உடல்களையும் உயிருக்கு போராடிய 180க்கும் மேற்பட்டோரையும் மீட்டனர். இவர்கள் அனைவரும் அருகிலிருந்த சுரங்கத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

பீஜிங் : சீனாவில் சுரங்கத் தொழிலாளர்கள் தங்குமிடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பலியாகினர்.நம் அண்டை நாடான சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் உள்ள மலையடிவாரத்தில் தனியார்

மூலக்கதை