அவங்க தான் பகுத்தறிவு வியாதிகளாச்சே... சாரி, வாதிகளாச்சே...!

தினமலர்  தினமலர்
அவங்க தான் பகுத்தறிவு வியாதிகளாச்சே... சாரி, வாதிகளாச்சே...!

ஹிந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிகுமார் அறிக்கை:

'என் தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும். என் குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அப்போது தான், என் ஆத்மா சாந்தி அடையும்' என, உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட வேலுார் மாணவி விஷ்ணு பிரியாவின் குரல், தமிழகத்தில், பல குடும்பங்களில் உள்ள தாய்களின் அவலக்குரல். 'நீட் தேர்வு ரத்தாகும் போது தான், அனிதாவின் ஆன்மா சாந்தி அடையும்' என, மேடையில் வசனம் பேசிய முதல்வர் ஸ்டாலின், உடனே மதுக்கடைகளை மூடி மாணவி விஷ்ணு பிரியாவின் ஆன்மாவை சாந்தி அடைய வைக்க வேண்டும்.

தி.மு.க., தலைமை நிலைய செயலர் மற்றும் வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் பேச்சு:

'அரசியல் என்பது அடிமட்ட மக்களுக்கானது. சிகை அலங்கார கடைகளில் கூட சிந்தனையை வளர்க்கலாம்' என்பதை, கருணாநிதியிடம் தான் கற்றேன். ஒரு வினாடி கூட வீணாக்கக் கூடாது என்பதையும், அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒரே மாதிரியாக இருப்பது என்பது அரிது என்பதையும், கருணாநிதியிடம் கற்றேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி:

ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் பதவியில் இருந்து கொண்டே விசாரணை நடத்துவது சரியல்ல. சிக்னல் கோளாறு இருக்கிறது என்று, மேலாளர் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மிகச் சிறப்பாக செயல்பட்டு, ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை எடுத்த, தமிழக முதல்வருக்கு பாராட்டுகள்.

பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு:

பொது வாழ்க்கையில் இருப்பதால், பிரச்னைகளுடன் எழுந்து, பிரச்னைகளுடன் தான் துாங்குவோம். எங்களின் மன அழுத்தங்களை காற்றில் பறக்க வைப்பது இளையாராஜவின் இசை தான். நான் ஒரு டாக்டர் என்றாலும், எனக்கு அவர் டாக்டர். ஆம், உலகில் சிறந்த பல்கலை கழகங்களில் கிடைக்காத மருந்து அவரது இசை. இப்போது, நானும், அவரும் நண்பர்கள். அவரும், நானும் ராஜ்யசபா எம்.பி.,க்கள்.

ஹிந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிகுமார் அறிக்கை: 'என் தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும். என் குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அப்போது தான், என்

மூலக்கதை