'புதிய கடலோர மேலாண்மை திட்டம்: அரசுக்கு குட்டு'

தினமலர்  தினமலர்
புதிய கடலோர மேலாண்மை திட்டம்: அரசுக்கு குட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: 'புதிய கடலோர மண்டல மேலாண்மைக்கான திட்டம் உருவாக்குவதில், 1996ம் ஆண்டு வரைபடத்திற்கு பதிலாக, 2011ம் ஆண்டு வரைப்படத்தை பின்பற்று வது ஏன்?' என, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணைய அதிகாரிகளிடம், தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னையை சேர்ந்த மகேந்திரன் என்பவர், '1996ல் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட, கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடத்தை அடிப்படையாக கொண்டு, புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும் என, 2021 பிப்ரவரியில் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. இதை, ஆணையம் மீறியுள்ளது' என, பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

கடலோரங்களில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் என நீர்நிலைகள் அனைத்தும், 1996 வரைபடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அதை கருத்தில் கொண்டு, 1996ம் ஆண்டு வரைபடத்தின் அடிப்படையில் புதிய திட்டத்தை உருவாக்குமாறு, 2021ல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதை செயல்படுத்தாத தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணைய அதிகாரிகளின் அணுகுமுறை கண்டனத்திற்குரியது.

பழைய வரைபடத்தின்படி, புதிய திட்டத்தின் வரைவு அறிக்கையை, தமிழ்நாடு ஆணையம் உருவாக்க வேண்டும். இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக் கின் அடுத்த விசாரணை ஜூலை, 28ல் நடக்கும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சென்னை: 'புதிய கடலோர மண்டல மேலாண்மைக்கான திட்டம் உருவாக்குவதில், 1996ம் ஆண்டு வரைபடத்திற்கு பதிலாக, 2011ம் ஆண்டு வரைப்படத்தை பின்பற்று வது ஏன்?' என, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணைய

மூலக்கதை