தேசிய உயர் கல்வி தரவரிசை பட்டியல்: சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து முதலிடம்!

தினமலர்  தினமலர்
தேசிய உயர் கல்வி தரவரிசை பட்டியல்: சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து முதலிடம்!

சென்னை: உயர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக, முதலிடம் பெற்றுள்ளது.

மத்திய கல்வி துறை சார்பில், நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் செயல் திறன் அடிப்படையில், தேசிய தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை, மத்திய கல்வி துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன்சிங், நேற்று புது டில்லியில் வெளியிட்டார்.


இதில், 'டாப் 20' பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த நான்கு கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. சென்னை ஐ.ஐ.டி., - முதலிடம்; கோவை அம்ரிதா விஷ்வ வித்யாபீடம், 15; வி.ஐ.டி., 17 மற்றும் அண்ணா பல்கலை, 18ம் இடங்களை பிடித்துள்ளன.


புதுச்சேரி கல்வி நிறுவனங்கள்:


'ஜிப்மர்' என்ற ஜவஹர்லால் முதுநிலை மருத்துவ கல்வி நிறுவனம், என்.ஐ.ஆர்.எப்., தேசிய தரவரிசை பட்டியலில், அகில இந்திய அளவில், 39வது இடம் பிடித்துள்ளது. இந்த நிறுவனம், கடந்த ஆண்டு, 54வது இடத்தில் இருந்தது. ஸ்ரீபாலாஜி வித்யாபீத் மஹாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி, கடந்த ஆண்டு, 70ம் இடத்தில் இருந்து, இந்த ஆண்டு, 77க்கு தள்ளப்பட்டுள்ளது. காஞ்சி மாமுனிவர் அரசு முதுநிலை கல்வி ஆராய்ச்சி நிறுவனம், கடந்த ஆண்டு, 80ம் இடத்தில் இருந்து, இந்த ஆண்டு, 50ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில், ஜிப்மர் முதுநிலை உயர் கல்வி நிறுவனம், கடந்த ஆண்டு, 6ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு ஒரு இடம் முன்னேறி, அகில இந்திய அளவில், 5ம் இடம் பெற்றுள்ளது. மஹாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி, கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும், 47ம் இடத்தில் உள்ளது.

சென்னை: உயர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக, முதலிடம் பெற்றுள்ளது.மத்திய கல்வி துறை சார்பில், நாட்டில் உள்ள உயர் கல்வி

மூலக்கதை