வரும் 11ல் தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா

தினமலர்  தினமலர்
வரும் 11ல் தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா

சென்னை: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து, ஒன்பது ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

இதை முன்னிட்டு, தமிழக பா.ஜ., சார்பில், 'மக்கள் சந்திப்பு பேரியக்கம்' என்ற பெயரில் மத்திய அரசு செயல்படுத்தி உள்ள திட்டங்களை மக்களிடம் சேர்க்கும் பணி இம்மாதம், 30ம் தேதி வரை நடக்கிறது.

அதன் ஒரு பகுதியாக, வேலுார் மாவட்டத்தில் உள்ள கந்தநேரியில் வரும், 11ம் தேதி, ஒன்பது ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. அதில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று, பேசுகிறார்.

இதற்காக அவர் அன்று காலை, சென்னைக்கு விமானத்தில் வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வேலுார் சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

கூட்டம் முடிந்ததும் ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் செல்கிறார்.

சென்னை: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து, ஒன்பது ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.இதை முன்னிட்டு, தமிழக பா.ஜ., சார்பில், 'மக்கள் சந்திப்பு பேரியக்கம்' என்ற பெயரில்

மூலக்கதை