ராகுலை கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் அமெரிக்காவில் போராட்டம்

தினமலர்  தினமலர்
ராகுலை கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் அமெரிக்காவில் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நியூயார்க்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை கண்டித்து, அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஐந்து நாள் பயணமாக அமெரிக்கா வந்துள்ளார். நேற்று முன்தினம் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்தபோது, அவரை வரவேற்பதற்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது சாலையோரத்தில் வரிசையாக நின்ற சீக்கியர்கள் சிலர், 'கோ பேக் ராகுல்' என, எழுதப்பட்ட போஸ்டர்களை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர்.

இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள், பஞ்சாபை தனி நாடாக அறிவிக்கக் கோரி வரும் காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் என்பதும், 1984ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராகுலை கண்டித்து போராட்டம் நடத்தியதும் தெரியவந்தது.

நியூயார்க்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை கண்டித்து, அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பல்வேறு

மூலக்கதை