பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கலாமே

தினமலர்  தினமலர்
பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கலாமேமாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகள் அதிகம் உள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கொரோனா காலத்திற்குப் பின் அதிகரித்தது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்டாப், மருத்துவ கல்லுாரியில் சேர இட ஒதுக்கீடு உட்பட பல சலுகைகள் தொடர்வதால் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

மேலும் அரசு டவுன் பஸ்களில் பயணிக்க இலவசம் என்பதால் பஸ்களில் பயணிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பள்ளி முடிந்ததும் ஒரே நேரத்தில் அனைவரும் பஸ்களில் செல்ல முற்படுவதால் பள்ளி மாணவர்களின் படிக்கட்டு பயணம் தொடர்கதையாக உள்ளது.

பள்ளி நேரத்தில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் இத்தகைய நிலை ஏற்படுகிறது. சாகசம் செய்வதாக நினைத்துக்கொண்டு படிகளில் தொங்கி பயணம் செய்கின்றனர். ஆபத்து நிறைந்த இந்த பயணம் பல சமயங்களில் விபத்தில் முடிகிறது.

இவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்கி மாணவர்கள் பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக கிராமப்புற பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்குவது அவசியமாகிறது.

மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகள் அதிகம் உள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கொரோனா காலத்திற்குப் பின் அதிகரித்தது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச

மூலக்கதை