உலக சுற்றுச்சூழல் தின விழா...

தினமலர்  தினமலர்
உலக சுற்றுச்சூழல் தின விழா...கூடலுார்-- உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு கூடலுார் நகராட்சி சுருளி அருவிக்கு செல்லும் ரோட்டில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நகராட்சி தலைவர் பத்மாவதி துவக்கி வைத்தார். கவுன்சிலர் லோகந்துரை, சுகாதார ஆய்வாளர் விவேக், மகளிர் குழுவினர், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் ஆப்தமித்ரா பேரிடர் கால நண்பன் அன்புராஜா தலைமையில் வன ஆர்வலர்கள் மரக்கன்றுகளை நட்டனர். துணிப் பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கூடலுார்-- உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு கூடலுார் நகராட்சி சுருளி அருவிக்கு செல்லும் ரோட்டில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் துப்புரவு பணிகள்

மூலக்கதை