சொட்டு நீர் பாசனத்திற்கு ஆயத்தமாகும் விவசாயிகள் கடும் வறட்சி எதிரொலி

தினமலர்  தினமலர்
சொட்டு நீர் பாசனத்திற்கு ஆயத்தமாகும் விவசாயிகள் கடும் வறட்சி எதிரொலி



கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் சொட்டு நீர் பாசனம் அமைத்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கோமுகி, மணிமுக்தா அணைகள், ஆறுகள் மற்றும் ஏரிகள் விவசாய பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

இப்பகுதியில் கரும்பு, நெல், மக்காச்சோளம், மரவள்ளி, மஞ்சள், உளுந்து, வேர்க்கடலை உட்பட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பருவ மழையின் போது நிலத்தடி நீர் மட்டம் வழிவகுத்து கிணற்று நீர் பாசனம் விவசாயிகளுக்கு கைகொடுக்கிறது.

கடும் வறட்சி காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறையும் போது, கிணறுகளில் தண்ணீர் மட்டமும் வெகுவாக குறைகிறது. அத்தருணத்தில், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திடும் பொருட்டு விவசாய நிலங்களில் சொட்டு நீர் பாசனம் அமைத்து விவசாயிள் பயிரிட்டு வருகின்றனர்.

சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு அரசு சார்பில் மானியம் வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறது. கள்ளக்குறிச்சி பகுதியில் கரும்பு, மஞ்சள், மரவள்ளி, பருத்தி உட்பட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்து பயிரிடப்பட்டு வருகிறது.

இந்த முறையை பயன்படுத்தி பயிர் செய்வதன் மூலம் நீர் ஆவியாகுதல் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. வேர் பகுதியில் தண்ணீர் சொட்டுவதால் பயிர் ஆரோக்கியமாகவும், அதிகளவு விளைச்சலும் கிடைக்கும்.

தற்போது நிலவும் வறட்சியால் கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல், காரனுார், சிறுவங்கூர், தென்கீரனுார், தச்சூர், வாணியந்தல், சோமண்டார்குடி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயிர் சாகுபடி செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் சொட்டு நீர் பாசனம் அமைத்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று

மூலக்கதை