தேச துரோக சட்டத்தை ரத்து செய்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்

தினமலர்  தினமலர்
தேச துரோக சட்டத்தை ரத்து செய்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி-தேச துரோக குற்றத்துக்கான சட்டப் பிரிவை ஆதரித்துள்ள சட்ட ஆணையம், 'இந்த சட்டப் பிரிவை ரத்து செய்வது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்' என, தெரிவித்துள்ளது.

தேச துரோக சட்டம்



ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்க, அப்போதைய பிரிட்டிஷ் அரசால் தேச துரோக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த சட்டம் தற்போது தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக பல்வேறு அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்தாண்டு விசாரித்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:

இந்திய தண்டனை சட்டத்தின் 124 ஏ பிரிவு தேசத் துரோகத்தை வரையறுக்கிறது. நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள் மீது, இந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்கும் வரை, அந்த சட்டப் பிரிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

அதுவரை இந்த சட்டப் பிரிவின் கீழ் யார் மீதும் வழக்குப் பதிவு செய்யக் கூடாது.

இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மத்திய சட்ட ஆணைய தலைவரான நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு இது தொடர்பாக எழுதிய பரிந்துரை கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

குறிப்பிட்ட சில நாடுகள் தேச துரோக சட்டத்தை ரத்து செய்துள்ளது என்ற காரணத்தைக் கூறி, நாமும் அதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கோருவதை ஏற்க முடியாது.

இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப் படுவதை தடுக்க, மத்திய அரசு சில வரையறைகளை, விதிமுறைகளை வகுக்கலாம்.

அந்த வரையறைகளுடன் அந்த சட்டத்தை தொடர்ந்து அமல்படுத்தலாம்.

இந்த சட்டப் பிரிவை முழுமையாக ரத்து செய்வது என்பது, நாட்டின் பாதுகாப்புக்கு, ஒருமைப்பாட்டிற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பிரிட்டிஷ் காலத்து சட்டம் என்பதற்காக, இதை ரத்து செய்ய முடியாது.

இதற்கு மாற்றாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவை இருந்தாலும், 124 ஏ பிரிவின் கீழ் கருதப்படும் குற்றத்தின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதாக அவை இல்லை.

124 ஏ பிரிவு கூறுவது என்ன?



இந்திய தண்டனை சட்டத்தில், 124 ஏ பிரிவு, தேச துரோகம் செய்தவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய பயன்படுகிறது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு ஜாமின் கிடைக்காது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை கிடைக்கும்.

புதுடில்லி-தேச துரோக குற்றத்துக்கான சட்டப் பிரிவை ஆதரித்துள்ள சட்ட ஆணையம், 'இந்த சட்டப் பிரிவை ரத்து செய்வது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாதகமான விளைவுகளை

மூலக்கதை