பறக்கும் பாலத்தில் இருந்து அருவியாய் கொட்டும் மழைநீர் நீர்நிலைகளில் சேமிக்க வழி இல்லையா

தினமலர்  தினமலர்
பறக்கும் பாலத்தில் இருந்து அருவியாய் கொட்டும் மழைநீர் நீர்நிலைகளில் சேமிக்க வழி இல்லையா



மதுரை -மதுரை புது நத்தம் ரோடு பறக்கும் பாலம் மேல்தளத்தில் ஆங்காங்கே இடைவெளிகள் இருப்பதால் மழை பெய்யும் போது அருவி போல் மழைநீர் கீழே கொட்டுகிறது.

மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சொக்கிகுளம் ஐ.ஓ.சி., ரவுண்டான முதல் ஊமச்சிகுளம் வரை 7.3 கி.மீ.,க்கு பறக்கும் பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலபணிகள் முடிந்து தற்போது பயன்பாட்டிலும் உள்ளது.

200க்கும் மேற்பட்ட கான்கிரீட் துாண்களை எழுப்பி அதற்கு மேல் கான்கிரீட் செக்மென்ட் இணைத்து பாலம் காட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த துாண்களின் மேற்புரம் கான்கிரீட் செக்மென்ட் இணையும் பகுதியில் ஆங்காங்கே இடைவெளி உள்ளது. இதனால் சிறு மழை பெய்தாலும்பாலத்தின் மேல் தேங்கும் மழைநீர் இடைவெளி வழியே கீழே கொட்டுகிறது.

நேற்று முன்தினம் பெய்த மழையில் திருப்பாலை பகுதியில் உள்ள 114, 118 எண் கொண்டதுாண்களின் மேலிருந்து அருவியாய் மழைநீர் கொட்டியது.நெடுஞ்சாலைத் துறை இதற்கு தீர்வு காண வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் வாசுகி கூறியதாவது: பறக்கும் பாலத்தின் மேலேவிழும் மழை நீரை கடத்த துாண்களின் குழாய்கள் பொருத்தியுள்ளனர். இருந்தாலும் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஆத்திகுளம், நாராயணபுரம், ஊமச்சிகுளத்தில் கண்மாய்கள், திருப்பாலையில் ஒரு குளம் உள்ளது. இப்பகுதி பறக்கும் பாலத்தின் மேல் தேங்கும் மழைநீரை கண்மாய், குளத்திற்குள் கொண்டு செல்ல வேண்டும்.

இதனால் ரோட்டில் மழைநீர் வீணாக தேங்காமல் சேமிக்கப்படும். இப்பகுதியின் நீராதாரமாக உள்ள நீர் நிலைகளில் தொடர்ந்து நீர் இருக்கும். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதுபோல் மழைநீரை சேமிக்க திட்டமிட வேண்டும், என்றார்.

மதுரை -மதுரை புது நத்தம் ரோடு பறக்கும் பாலம் மேல்தளத்தில் ஆங்காங்கே இடைவெளிகள் இருப்பதால் மழை பெய்யும் போது அருவி போல் மழைநீர் கீழே கொட்டுகிறது.மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தில்,

மூலக்கதை