'3டி' அச்சு தொழில்நுட்பத்தில் உலகின் முதல் கோவில்

தினமலர்  தினமலர்
3டி அச்சு தொழில்நுட்பத்தில் உலகின் முதல் கோவில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஹைதராபாத்: '3டி' எனப்படும் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் அச்சடிக்கும், உலகின் முதல் ஹிந்து கோவில் தெலுங்கானாவில் அமைகிறது.

கட்டுமானப் பணிகளில், முப்பரிமாண அச்சு என்ற நவீன முறை தற்போது பிரபலமாகி வருகிறது. கம்ப்யூட்டரில் முப்பரிமாணத்தில் கட்டடத்தின் வரைபடம் தயாரிக்கப்படுகிறது. அதை சிறப்பு இயந்திரம் வாயிலாக அச்சடிக்கும் வகையில் கட்டுமானப் பணி நடக்கிறது.

இந்த தொழில்நுட்பத்தால் மிகக் குறுகிய காலத்தில் கட்டடம் கட்ட முடியும். மேலும், செலவும் குறைவு. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உலகின் முதல் ஹிந்து கோவில், தெலுங்கானாவின் சித்திபட் மாவட்டத்தின் புருகுபல்லியில் கட்டப்படுகிறது. அங்குள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், 3,800 சதுர அடியில் இந்தக் கோவில் கட்டப்படுகிறது.

விநாயகருக்காக கொழுக் கட்டை வடிவிலும், சிவனுக்காக சிவலிங்கம் வடிவிலும், பார்வதிக்காக தாமரை வடிவிலும் இந்தக் கோவில் அமைய உள்ளது. 'சிம்ப்ளிபோர்ஜ் கிரியேஷன்ஸ்' என்ற 3டி தொழில்நுட்ப அச்சு தொழிலில் ஈடுபட்டு உள்ள நிறுவனம், இந்தக் கோவிலை கட்டுகிறது.

ஹைதராபாத்: '3டி' எனப்படும் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் அச்சடிக்கும், உலகின் முதல் ஹிந்து கோவில் தெலுங்கானாவில் அமைகிறது.கட்டுமானப் பணிகளில், முப்பரிமாண அச்சு என்ற நவீன முறை

மூலக்கதை