பொருளாதார நெருக்கடியால் பாக்.,கில் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு : ஐ.நா., சபை

தினமலர்  தினமலர்
பொருளாதார நெருக்கடியால் பாக்.,கில் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு : ஐ.நா., சபை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அடுத்து வரும் மாதங்களில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா., சபை எச்சரித்துள்ளது.

கொரோனா பரவல், ரஷ்யா - உக்ரைன் போர் போன்றவை உலக அளவில் கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

அந்நிய செலாவணி குறைந்ததை அடுத்து, நம் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் போன்றவை வரலாறு காணாத நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

குறிப்பாக, பாக்., கில் உணவு, மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவைக்கு ஏற்கனவே கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அடுத்து வரும் மாதங்களில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா., சபை

மூலக்கதை