ராகுல் பங்கேற்ற வெளிநாட்டு நிகழ்ச்சி: தேசிய கீதத்தை அவமதித்த பார்வையாளர்கள்!

தினமலர்  தினமலர்
ராகுல் பங்கேற்ற வெளிநாட்டு நிகழ்ச்சி: தேசிய கீதத்தை அவமதித்த பார்வையாளர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள ராகுலுக்கு, அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், தேசிய கீதத்தை அவமதித்த பார்வையாளர்களுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது

10 நாள் பயணமாக அமெரிக்க செல்ல காங்., முன்னாள் எம்.பி., ராகுல் திட்டமிட்டிருந்தார். புதுடில்லி நீதிமன்றம் தடையில்லா சான்று அளித்ததை தொடர்ந்து, சமீபத்தில் ராகுலுக்கு, புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இதையடுத்து ராகுல் நேற்று அமெரிக்கா சென்றார். அப்போது ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, இன்று(மே31) ராகுல் பங்கேற்க அவரது ஆதரவாளர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது சிலர், எழுந்து நிற்காமல் அமர்ந்து இருந்தனர்.

மேலும், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கீதத்தை நடுவில் நிறுத்திவிட்டு, மைக் சோதனைக்காக செய்ததாக தெரிவித்தனர். தேசிய கீதத்தை அவமதித்த பார்வையாளர்களுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்த சம்பவம் நடக்கும் போது ராகுல் இருந்தாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள ராகுலுக்கு, அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், தேசிய கீதத்தை அவமதித்த பார்வையாளர்களுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்த வீடியோ

மூலக்கதை