ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மீண்டும் வேகம்: ரூ.930 கோடிக்கு பணிகள் துவக்கம்

தினமலர்  தினமலர்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மீண்டும் வேகம்: ரூ.930 கோடிக்கு பணிகள் துவக்கம்


புதுச்சேரி- புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.930 கோடி மதிப்பில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வந்த நிலையில், கவர்னர் மற்றும் முதல்வரின் உத்தரவினால் மீண்டும் வேகம் எடுத்துள்ளன. ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தற்போதை செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

புதுச்சேரியில், ஸ்மார்ட் சிட்டி திட்டம், நகரை அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நவீன நகரமாக உருவாக்கும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மொத்தம் ரூ.930 கோடி மதிப்பில் 130-க்கு மேற்பட்ட பணிகள் பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை, குடிநீர் திட்டங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுதல் உள்ளிட்ட பணிகள் புதுச்சேரி பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்ணா திடல் விளையாட்டு அரங்கம், சின்னையாபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுதல் உள்ளிட்ட பணிகள் ரூ. 80 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்ட குழுமம் மூலம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

புதுச்சேரி நகராட்சி மூலம் ரூ.26 கோடி மதிப்பில் சாலையோர வாய்க்கால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனமான தேசிய கட்டுமான கழகம் மூலம் ரூ.283 கோடி மதிப்பில் புதுச்சேரி குபேர் மார்க்கெட் புதுப்பித்தல், தற்போதைய பஸ் நிலையத்தை மேம்படுத்துதல், புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி நகரப்பகுதிக்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணி ரூ.170 கோடி மதிப்பில் வருவாய் துறை மூலமும் மேற்கொள்ளப்பட உள்ளது. போக்குவரத்து துறை மூலம் ரூ.27 கோடி மதிப்பில் இ-பஸ்கள் வாங்குவதற்கான பணியும், சுகாதாரத்துறை மூலம் ரூ.9 கோடி மதிப்பில் இ- ெஹல்த் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இப்பணிகளுக்கான மதிப்பீடுகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்ட குழுமத்தின் ஒப்புதல் பெற்ற பின் அரசு விதிகளை பின்பற்றி ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அவை முறையாக குழுமத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பின்பே பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இதில் 37 பணிகள் ரூ.39 கோடி மதிப்பிற்கு முடிவடைந்துள்ளது . மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

புதுச்சேரி- புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.930 கோடி மதிப்பில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வந்த

மூலக்கதை