பார்த்து பார்த்து கட்டிருக்காங்க: ஒரு மாடி எழுப்பினால் கூட தாங்காத மனநல பிரிவு: மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த சோதனை

தினமலர்  தினமலர்
பார்த்து பார்த்து கட்டிருக்காங்க: ஒரு மாடி எழுப்பினால் கூட தாங்காத மனநல பிரிவு: மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த சோதனை

மதுரை - மனநல நோயாளிகளை மென்மையாக கையாள வேண்டும். அவர்களை மற்றவர்கள் போல கடுமையாக நடத்தமுடியாது தான். அதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள மனநல பிரிவு கட்டடத்தையும் ஒரு மாடி கூட கூடுதலாக எழுப்ப முடியாத அளவு பெயருக்கு கட்டியுள்ளனர்.

ஐந்தாண்டுகளுக்கு முன் மனநல புற நோயாளிகளுக்கான தனிப்பிரிவு கட்டடம் கட்டப்பட்டது. எந்த திட்டமிடலும் இன்றி தரைத்தளம் மட்டுமே கட்டி முடித்துள்ளனர். பொதுப்பணித்துறை கட்டுமான குறிப்பில், தரைத்தளத்திற்கு மேலே ஒருதளம் மட்டுமே கட்ட முடியும். அதற்கு மேலாக அடுத்தடுத்த தளங்கள் எழுப்பினால் கட்டடம் தாங்காது என்பது போல குறிப்பிட்டுள்ளனர். இத்தனைக்கும் சமீபத்தில் தான் இக்கட்டடம் கட்டப்பட்டது.

உள்நோயாளிகளுக்கு தனி வார்டும், மதுபோதை மறுவாழ்வு நோயாளிகளுக்கு தனி வார்டும் செயல்படுகிறது. புதிய கட்டடத்தில் புறநோயாளிகள் பிரிவு, கவுன்சிலிங், மாணவர்களுக்கான வகுப்பறை செயல்படுகிறது. தினமும் 40 புதிய நோயாளிகளும் 300 முதல் 500 பழைய நோயாளிகளும் சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்களுடன் உறவினர்களும் சேர்ந்து வருவதால் மிகவும் நெருக்கடியாக உள்ளது. தரைத்தளத்தின் மேலே கூடுதலாக ஒரு தளத்தையாவது எழுப்பினால் தான் நெருக்கடியை சமாளிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் ஒரு மாடி கட்டடம் மட்டுமே கட்டமுடியும் வகையில் எப்படி கட்டினர் என்பதையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை - மனநல நோயாளிகளை மென்மையாக கையாள வேண்டும். அவர்களை மற்றவர்கள் போல கடுமையாக நடத்தமுடியாது தான். அதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள மனநல பிரிவு கட்டடத்தையும் ஒரு மாடி கூட

மூலக்கதை