16 வயது சிறுமியை 22 முறை குத்தி கொலை செய்த இளைஞர் கைது

தினமலர்  தினமலர்
16 வயது சிறுமியை 22 முறை குத்தி கொலை செய்த இளைஞர் கைது

தலைநகர் புதுடில்லியின், ஷாபாத் டெய்ரி பகுதியில் வசித்து வந்த, 16 வயது சிறுமியும், அதே பகுதியைச் சேர்ந்த, சாஹில், 20, என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நண்பர் மகனின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க சிறுமி சென்றார். அப்போது, பின்தொடர்ந்து வந்த சாஹில், அவரிடம் வாக்குவாதம் செய்தார்.

இதில் ஆத்திரமடைந்த சாஹில், மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியை, 20க்கும் மேற்பட்ட முறை குத்தினார். இதில் நிலைகுலைந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். எனினும், கோபம் தீராத சாஹில், அருகிலிருந்த கல்லை எடுத்து சிறுமியின் தலையில் போட்டார். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின், சாஹில் தலைமறைவானார்.

இது தொடர்பான நிகழ்வுகள், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. இது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதில், சிறுமியை சாஹில் தாக்கிய போது, அந்த வழியே சென்ற பொது மக்கள் கண்டும் காணாதது போல் சென்றது, பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, உயிரிழந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி வழக்குப் பதிந்த போலீசார், உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் தலைமறைவான சாஹிலை கைது செய்தனர்.

பயங்கரவாதிகள் இருவருக்கு சவுதியில் மரண தண்டனை

சவுதி அரேபியாவில், 2015ல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பஹ்ரைனைச் சேர்ந்த இரண்டு நபர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறி, ஜாபர் சுல்தான், சாதிக் தமர் என்ற இரு நபர்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.

பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணையின் இறுதியில், இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் கிழக்கு மாகாணத்தில், நீண்ட வாள்களால் இருவரின் தலைகளும் துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பஸ்சில் அரசு ஊழியரிடம் 30 சவரன் நகை 'அபேஸ்'

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலை சேர்ந்தவர் ராஜேஷ், 43; திருவண்ணாமலை நுகர்பொருள் வாணிபக்கிடங்கு ஊழியர். இவர், தன் குடும்பத்தினர் ஆறு பேருடன் நேற்று முன்தினம், வேலுார் மாவட்டம், ஆம்பூரிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். மீண்டும் அன்று மாலை, வீடு திரும்ப, வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து, திருவண்ணாமலை செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.

அப்போது, அவர்கள் எடுத்து சென்ற பைகளை பஸ்சின் உள்ளே உள்ள லக்கேஜ் வைக்கும் பகுதியில் வைத்தனர். தண்ணீர் பாட்டில் வாங்க பஸ்சில் இருந்து ராஜேஷ் இறங்கி கடைக்கு சென்று திரும்பினார். அப்போது நகை வைத்திருந்த பை சிறிது திறந்திருந்தது. அதிர்ச்சியடைந்த ராஜேஷ் பையை பார்த்தார். அதிலிருந்த, 30 சவரன் நகை காணாமல் போயிருந்தது. இது குறித்து ராஜேஷ் புகாரின்படி, வேலுார் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

மொபைல் திருடியதாக கூறி கொலை செய்த 5 பேர் கைது

திருச்சி, சிந்தாமணி பகுதியில் உள்ள காவிரி ஆற்றுப் பாலத்தில், பராமரிப்பு வேலை நடக்கிறது. வெளியூர் பணியாளர்கள், அப்பகுதியில் தங்கி வேலை பார்க்கின்றனர். சிந்தாமணி ஓடத்துறை பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சக்திவேல், 35, என்பவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, அங்கு தங்கியுள்ள ஒருவரின் 'மொபைல் போன்' மற்றும் ஆயிரம் ரூபாயை திருடியதாக கூறப்படுகிறது.

அதனால், தொழிலாளர்கள் ஐந்து பேர் அவரை பிடித்து அடித்ததில் சக்திவேல் இறந்து விட்டார். அவரது உடலை, காவிரி பாலத்தின் அடியில், போட்டு சென்று விட்டனர். தகவலறிந்த கோட்டை போலீசார், சக்திவேல் உடலை மீட்டு விசாரித்தனர். பின், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேல், 29, உட்பட ஐந்து பேர் சக்திவேலை அடித்துக் கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து கோட்டை போலீசார், நேற்று ஐந்து பேரையும் கைது செய்தனர்.

மூதாட்டியை தாக்கி நகை பறித்த பெண்

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அருகே திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி சீதா லட்சுமி 60. இருவரும் நேற்று காலை வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டுக்குள் வந்த ஒரு பெண் சீதாலட்சுமியை தாக்கி கீழே தள்ளியதுடன் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்க நகையை பறித்துச் சென்றார். காயமுற்ற சீதாலட்சுமி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இரு குழந்தைகளை கொன்று தாய் துாக்கிட்டு தற்கொலை


திருச்சி, எடமலைப்பட்டி புதுார் கே.ஆர்.எஸ்., நகரில் வசிப்பவர் மனோஜ் குமார், 30. இவரது மனைவி ஷோபனா, 26. இந்த தம்பதிக்கு, தக் ஷிவன், 3, மற்றும் 11 மாதத்தில் கபிக் ஷன் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். மனோஜ் குமார், எடமலைப்பட்டி புதுாரில் பர்னிச்சர் கடை நடத்தினார். நஷ்டம் ஏற்பட்டதால் மனதளவில் பாதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம், மனோஜ்குமார் வெளியூர் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஷோபனா, இரண்டு மகன்களையும் துாக்கில் தொங்க விட்டு, அவரும் துாக்கிட்டு தற்கொலை செய்தார். நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய மனோஜ்குமார், மனைவி, குழந்தைகள் துாக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். எடமலைப் பட்டி புதுார் போலீசார், மூவரின் சடலத்தையும் கைப்பற்றி விசாரிக்கின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.

வங்கி மேலாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

புதுச்சேரி லாஸ்பேட்டை குமரன் நகர், 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆஷிஷ் ஹரிபரம்பத்; சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பொதுத் துறை வங்கி மேலாளர். இவரது வீட்டின் தரைதளத்தில் வசித்த ஹரிபரம்பத்தின் பெற்றோர், கடந்த 16ம் தேதி கேரளா சென்று விட்டனர்.

கடந்த 27ம் தேதி இரவு ஆஷிஷ் ஹரிபரம்பத் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் 14 சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

தலைநகர் புதுடில்லியின், ஷாபாத் டெய்ரி பகுதியில் வசித்து வந்த, 16 வயது சிறுமியும், அதே பகுதியைச் சேர்ந்த, சாஹில், 20, என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு,

மூலக்கதை