குஜராத்தை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சென்னை அணி சாம்பியன்

தினமலர்  தினமலர்
குஜராத்தை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சென்னை அணி சாம்பியன்


அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக சாம்பியன் ஆனது.

முதலில் பேட் செய்த குஜராத் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு ஆட்டத்தை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஓவரில் மூன்று பந்து வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டது. அதன் பிறகு டக்வொர்த் லீவிஸ் முறைப்படி

15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மழை ஓய்ந்ததும் வெற்றி இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 கடந்து வெற்றி பெற்றது. அணியின் துவக்க வீரர்கள் ருத்ராஜ் 26 ரன்களும் கான்வே 47 ரன்களும் சேர்த்து அவுட் ஆகினர். ரஹானே 27 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ராயுடு 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிவம் துபே ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்தார்.

கடைசி ஓவரின் கடைசி 2 பந்துகளுக்கு 10 ரன் தேவை இருந்த நிலையில் ஜடேஜா 1 சிக்சர் அடித்தார். ஆட்டத்தின் கடைசி பந்தை பவுன்டரிக்கு விளாசி சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற காரணமாக இருந்தார்.

இதன் மூலம் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது சென்னை அணி.

அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக

மூலக்கதை