டி.எஸ்.பி., மீது நடவடிக்கை? லஞ்ச ஒழிப்பு போலீஸ் 'கப்சிப்'

தினமலர்  தினமலர்
டி.எஸ்.பி., மீது நடவடிக்கை? லஞ்ச ஒழிப்பு போலீஸ் கப்சிப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


சென்னை : ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, டி.எஸ்.பி.,மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமி நாராயணன், 36; வேதநாராயணன், 36; ஜனார்த்தனன், 39.இவர்கள் உட்பட, 10 பேர் இயக்குனர்களாக இருந்து, ஐ.எப்.எஸ்., எனும் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

இவர்கள் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக, 2018 - 2022 ஜூலை வரை, 84 ஆயிரம் பேரிடம், 5,900 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

இது குறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, 21 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

முக்கிய ஏஜன்டுகளாக செயல்பட்ட, ஆறு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

லட்சுமி நாராயணன் உள்ளிட்ட நான்கு பேர் வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டனர். இவர்களை, விசாரணை அதிகாரியாக இருந்த, டி.எஸ்.பி.,கபிலன் தப்பிக்க விட்டுவிட்டதாகவும், அவருக்கு லஞ்சமாக, 5 கோடி ரூபாய் கைமாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில், கபிலன், ஏப்ரலில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு பரிந்துரை செய்து இருப்பதாக, டி.ஜி.பி., சைலேந்திரபாபு அறிவித்தார்.

ஆனால், கபிலன் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்காமல், மவுனம் காக்கின்றனர். இது, பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

'லஞ்ச விவகாரத்தில் கபிலன் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில், மேலும் சில அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் பற்றியும் விசாரித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை : ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, டி.எஸ்.பி.,மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதிப்பதாக குற்றச்சாட்டு

மூலக்கதை