இன்று விண்ணில் பாய்கிறது 'எப் 12' ராக்கெட்

தினமலர்  தினமலர்
இன்று விண்ணில் பாய்கிறது எப் 12 ராக்கெட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை,- 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது.அங்குள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின், 'ஜி.எஸ்.எல்.வி., - எப் 12' ராக்கெட் மற்றும், 'என்.வி.எஸ்., - 01' செயற்கைக் கோளை சுமந்தபடி, இன்று காலை, 10:42 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

இதற்கான, 'கவுன்ட் டவுன்' நேற்று காலை, 7:21 மணிக்கு துவங்கியது. செயற்கைக்கோளின் எடை, 2,232 கிலோ. இது, கடல், வான்வழி, தரை வழி போக்குவரத்தின் வழிகாட்டி சேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும்.

ஜி.எஸ்.எல்.வி., - 12 ராக்கெட்டானது, ஜி.எஸ்.எல்.வி., வகையில் இஸ்ரோ அனுப்பும், 15வது ராக்கெட். பூமியில் இருந்து இந்த ராக் கெட், செயற்கைகோள், எரிபொருள் உட்பட மொத்தம், 420 டன் எடையை சுமந்து செல்ல உள்ளது.

சென்னை,- 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது.அங்குள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின்,

மூலக்கதை