ரகசியமாக எம்.டெக்., படித்து சாதனை: தடைகளை தகர்த்த ஆப்கன் மாணவி

தினமலர்  தினமலர்
ரகசியமாக எம்.டெக்., படித்து சாதனை: தடைகளை தகர்த்த ஆப்கன் மாணவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி:ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டு மாணவி சென்னை ஐ.ஐ.டி.,யில் ரகசியமாக எம்.டெக்., படிப்பை முடித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்திஉள்ளது.

அனுமதி மறுப்பு


தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் 2021ல் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அவர்கள் கல்வி கற்க அனுமதி மறுக்க பட்டது.இந்நிலையில், ஆப்கனின் சர் இ போல் பகுதியைச் சேர்ந்த மாணவி பெகிஸ்தா கைருதீன், சென்னை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் எம்.டெக்., படிப்பை ரகசியமாக முடித்துஉள்ளார்.

கடந்த 2021ல், எம்.டெக்., கெமிக்கல் இஞ்சினியரிங் படிப்பில் சேர விண்ணப்பித்த அவர், நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் படிப்பில் சேர முடியவில்லை.இருப்பினும், பேராசிரியர் ஒருவர் உதவியுடன், ஆன்லைன் வாயிலாக படித்த பெகிஸ்தா, பல்வேறு தடைகளைத் தாண்டி எம்.டெக்., படிப்பை வெற்றிகரமாக சமீபத்தில் முடித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:வீட்டில் இருந்தபடியே படித்ததால், முதல் இரண்டு செமஸ்டர்கள் கடினமாக இருந்தன.ஆய்வக வசதியை பெற முடியாததால், பேராசிரியரின் அறிவுறுத்தலின்படி, வீட்டிலேயே மாதிரி ஆய்வகத்தைஉருவாக்கினேன். என் சகோதரி சமையலுக்கு பயன்படுத்தும் 'மைக்ரோவேவ் ஓவன்' நகைக்கடையில் பயன்படுத்தப்படும் குடுவைகள் ஆகியவற்றை வைத்து வீட்டிலேயே நிறுவிய ஆய்வகத்தில் பயிற்சி பெற்றேன்.

பட்டமளிப்பு விழா

புதுடில்லி:ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டு மாணவி சென்னை ஐ.ஐ.டி.,யில் ரகசியமாக எம்.டெக்., படிப்பை முடித்துள்ளது ஆச்சர்யத்தை

மூலக்கதை