வருமான வரி 'ரெய்டு': 15 இடங்களில் நிறைவு

தினமலர்  தினமலர்
வருமான வரி ரெய்டு: 15 இடங்களில் நிறைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை,--தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், 'டாஸ்மாக்' முகவர்கள், அவர்களுக்கு தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என, சென்னை, கோவை, கரூர் மற்றும் ஈரோடு பகுதிகளில், கடந்த, 26ம் தேதி, 40 இடங்களில் வருமான வரி சோதனை துவங்கியது.

மூன்றாவது நாளாக நேற்றும் சோதனை நீடித்தது. இதில், வரி ஏய்ப்புக்கான பல்வேறு ஆதாரங்கள் சிக்கின.

இதுகுறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய, 40 இடங்களில் நடந்த சோதனையில், சென்னை உட்பட, 15 இடங்களில் நடந்த சோதனை நிறைவடைந்துள்ளது.

வரிஏய்ப்பு மற்றும் கணக்கில் காட்டப்படாத வருவாய்க்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. கரூரில், 2.15 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

மூன்றாவது நாளாக நேற்றும், கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள், வரி ஏய்ப்புக்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. தொடர்ந்து சோதனை மற்றும் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு கூறினர்.

சென்னை,--தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், 'டாஸ்மாக்' முகவர்கள், அவர்களுக்கு தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என, சென்னை, கோவை, கரூர் மற்றும் ஈரோடு

மூலக்கதை