சத்தீஸ்கர் சட்டசபை கட்டடத்தை சோனியா தான் திறந்து வைத்தார்: நிர்மலா சீதாராமன்

தினமலர்  தினமலர்
சத்தீஸ்கர் சட்டசபை கட்டடத்தை சோனியா தான் திறந்து வைத்தார்: நிர்மலா சீதாராமன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: புதிய பார்லிமென்டை ஜனாதிபதி வைத்து திறக்கவில்லை என்று விவாதம் எழுகிறது.

சமீபத்தில், சத்தீஸ்கரில் புதிய சட்டசபை கட்டடத்தை, காங்., முன்னாள் தலைவர் சோனியா திறந்து வைத்தார். தெலுங்கானாவில் சட்டசபை கட்டட திறப்பு விழாவுக்கு, அம்மாநில கவர்னர் தமிழிசை அழைக்கப்படவில்லை; முதல்வர் தான் திறந்தார். ஆனால், இப்போது மட்டும் விமர்சனம் செய்கின்றனர்.

டவுட் தனபாலு:

எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தில் உள்நோக்கம் உள்ளது... அடுத்து வரும் லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ.,வுக்கு எதிராக அணி திரள்வதற்கு, இதை ஒரு சாக்காக பயன்படுத்துறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!



மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்:

குஜராத்தின் அமுல் பால் கூட்டுறவு நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பால் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவி, பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடுகள், ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

டவுட் தனபாலு:

ஏற்கனவே, தமிழகத்துல பல தனியார் பால் நிறுவனங்கள் இருக்குது... அதனுடன் ஒன்றாக அமுலும் இருந்துட்டு போகட்டுமே... அமுலை விட, தரமான பாலை தந்தா, மக்கள் ஆவினுக்கு தான் ஆதரவு தருவர் என்பதில், 'டவுட்'டே இல்லை!



தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:

தமிழகத்தில் தினமும், 2.44 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் நிலையில், ஆவின் கொள்முதல் செய்வது, 35 லட்சம் லிட்டர் மட்டுமே. அதாவது, மாநில பால் உற்பத்தியில் வெறும், 14 சதவீதத்தை மட்டுமே ஆவின் வாங்குகிறது. ஆவின் நிறுவனத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் சிறிதளவும் ஈடுபடாமல், அமுலுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிப்பது, போலி அக்கறை தான்.

டவுட் தனபாலு:

தமிழகத்துல, எத்தனையோ தனியார் நிறுவனங்கள், பால் உற்பத்தியாளர்களுக்கு பல சலுகைகளையும், கூடுதல் விலையும் தந்து வியாபாரத்தை பெருக்குறாங்க... அவங்களை கண்டுக்காம இருந்துட்டு, அமுலுக்கு மட்டும் முதல்வர் எதிர்ப்பு தெரிவிப்பதில், அரசியல் இருக்கிறது என்பதில், 'டவுட்'டே இல்லை!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: புதிய பார்லிமென்டை ஜனாதிபதி வைத்து திறக்கவில்லை என்று விவாதம் எழுகிறது. சமீபத்தில், சத்தீஸ்கரில் புதிய சட்டசபை கட்டடத்தை, காங்.,

மூலக்கதை