கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., அரசு கொண்டு வந்த ரூ 30 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் ரத்து!

தினமலர்  தினமலர்
கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., அரசு கொண்டு வந்த ரூ 30 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் ரத்து!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பெங்களூரு-முந்தைய பா.ஜ., ஆட்சியில் கொண்டு வந்த, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சி பணிகளுக்கான டெண்டர்களை ரத்து செய்து, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதால், ரத்து செய்துள்ளதாக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

வாரிய பணிகள்



மேலும், அரசின் பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள் சார்பில் மேற்கொண்ட பணிகளுக்கு பாக்கி உள்ள பில் தொகை எதுவும் வழங்க கூடாது எனவும் கூறியுள்ளார்.

அந்த வரிசையில் முதல்வர் அறிவுறுத்தலின்படி, தற்போது, அனைத்து துறைகள் சார்பில் அழைக்கப்பட்ட டெண்டர்களை உடனடியாக ரத்து செய்யும்படி அதிரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாநிலம் முழுதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளுக்கான டெண்டர்களை ரத்து செய்யும்படி, தலைமை செயலர் வந்திதா ஷர்மா பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து, அரசு அளித்துள்ள விளக்கம்:

போதிய நிதி இல்லாமலேயே டெண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெண்டர் அழைப்பதற்கு முன், நிதித்துறை அதிகாரிகள், நிலம் கையகப்படுத்தும் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தும், விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளன.

கோப்புகள் பரிசீலனை



சில பணிகள் விஞ்ஞான ரீதியாக இல்லை. பல பணிகள் டெண்டர் அழைப்பதற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில், முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, டெண்டர் அழைத்துள்ள பணிகள் குறித்த கோப்புகள் பரிசீலனை செய்யப்பட வேண்டும். அதுவரை நடந்து வரும் வளர்ச்சி பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன் பா.ஜ., அரசு அனுமதி அளித்த அனைத்து வளர்ச்சி பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

முடங்கும் அபாயம்



மேலும், நிதி நிலையை அறிந்து தான் அடுத்த திட்டங்களுக்கும் அனுமதி தரப்படும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், விஸ்வேஸ்வரய்யா நீர் வாரியம், கிருஷ்ணா நீர் வாரியம், மின்துறை, பொதுப்பணி, கிராமிய மேம்பாடு மற்றும் பஞ்சாயத் ராஜ், ஜல்ஜீவன் திட்டம் உட்பட நுாற்றுக்கணக்கான பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, பா.ஜ., தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, பெங்களூரில் நேற்று கூறியதாவது:எங்கள் ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து வளர்ச்சி பணிகளையும் நிறுத்தி, அதற்கு அழைக்கப்பட்ட டெண்டர்களையும் காங்கிரஸ் அரசு ரத்து செய்துள்ளது. இது பற்றி, எங்களுக்கு கவலை இல்லை.ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்த அரசு செயல்படவில்லை. அரசு எடுக்கும் முடிவானது, மக்களின் நலன் காப்பதாக இருக்க வேண்டும்.குறைந்தபட்சம் மக்கள் வளர்ச்சி பணிகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்க வேண்டும். எங்களுக்கு இல்லை என்றாலும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் அரசு கவனம் செலுத்தட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூரு-முந்தைய பா.ஜ., ஆட்சியில் கொண்டு வந்த, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சி பணிகளுக்கான டெண்டர்களை ரத்து செய்து, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். போதிய நிதி

மூலக்கதை