'லவ் டுடே' ஹிந்தி ரீமேக்கில் அமீர்கான் மகன்

தினமலர்  தினமலர்
லவ் டுடே ஹிந்தி ரீமேக்கில் அமீர்கான் மகன்

தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. காதல் ஜோடி செல்போனை மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பிரச்னைகளை மையமாக வைத்து தயாராகி இருந்தது. இதில் நாயகியாக இவானா நடித்திருந்தார். சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோரும் நடித்து இருந்தனர். தற்போது 'லவ் டுடே' படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இதன் உரிமத்தை போனி கபூர் வாங்கி உள்ளார். இதில் இவானா நடித்த கேரக்டரில் போனி கபூரின் மகள் குஷி கபூர் நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் நடித்த கேரக்டரில் அமீர்கான் மகன் ஜுனைத் கானும் நடிக்க இருக்கிறார். படத்தை அத்வைத் சந்தன் டைரக்டு செய்கிறார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

மூலக்கதை