ஜப்பான் முதலீடுகளை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழகம் வரவேற்கிறது: முதல்வர் ஸ்டாலின்

தினமலர்  தினமலர்
ஜப்பான் முதலீடுகளை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழகம் வரவேற்கிறது: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஒசாகா: மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீடுகளை வரவேற்பதாக ஜப்பான் சென்ற முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார். சிங்கப்பூரில் அந்நாட்டு அமைச்சர்கள், முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார் ஸ்டாலின். மேலும், சில நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. இரண்டு நாட்கள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பான் கிளம்பினார். அங்கு ஜப்பானின் ஒசாகாவுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலினை ஒசாகாவுக்கான இந்திய தூதர் நிகிலேஷ் கிரி வரவேற்றார்.

ஒசாகாவில் ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான ஜெட்ரோவுடன் இணைந்து, அங்கு இன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்றார். அப்போது, தமிழகத்தில் உள்ள ஜப்பானிய நிறுவனங்களை பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியதாவது: ஜப்பான் முதலீட்டாளர்களை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழகம் வரவேற்கிறது. மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம்.

தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ளவும், சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஜப்பான் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஜப்பான் நாட்டின் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியை அதிகம் பெறும் நாடு இந்தியா தான். இந்தியாவில் தமிழகம் தான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக முன்னிலையில் விளங்குகிறது. உற்பத்தி சார்ந்த துறைகள் மட்டுமின்றி மேம்பாட்டு திட்டங்களிலும் முதலீடு செய்ய அழைக்கிறோம். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

ஒசாகா: மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீடுகளை வரவேற்பதாக ஜப்பான் சென்ற முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக சிங்கப்பூர்,

மூலக்கதை