முதல்வர் மக்களை பற்றியே சிந்திப்பதால் எங்களை பார்த்தால் கூட சிரிப்பதில்லை

தினமலர்  தினமலர்
முதல்வர் மக்களை பற்றியே சிந்திப்பதால் எங்களை பார்த்தால் கூட சிரிப்பதில்லை

தமிழக கைத்தறித் துறை அமைச்சர் காந்தி பேட்டி:


இந்தியாவிலேயே குஜராத்துக்கு பின் தமிழகம், இரண்டாவது இடத்தில் உள்ளது என, கூறிய நிலையில், தற்போது, குஜராத்தை மிஞ்சும் அளவிலான முன்னேற்றத்தை, முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். மேலும், முதல்வர் எப்போதும், மக்களை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதால், எங்களை பார்த்தால் கூட சிரிப்பது இல்லை.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:

சர்வதேச தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கவும், வெளிநாட்டு நிறுவனங்களை கவரவும், ஒரு நாளைக்கு, 12 மணி நேர வேலை சட்டத்தை, கையில் எடுத்துச் செல்ல நினைத்த முதல்வர், வெறுங்கையோடு வெளிநாடு சென்றிருக்கிறார். திரும்பி வரும் போது தான், அந்நிய முதலீடு காயா, பழமா என்பது தெரியும்.

முதல்வர், 'வெறும் கையோடு' தான் போயிருக்கார் என்பது, இவருக்கு தெளிவாக தெரியுமா?

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் அறிக்கை

: புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவை, தி.மு.க., புறக்கணிப்பதாக, எம்.பி., சிவா கூறி உள்ளார். 'வரும், 2024 லோக்சபா தேர்தலில், நாங்கள் போட்டியிட மாட்டோம். ஏனெனில், ஒரு வேளை வெற்றி பெற்றால், புதிய பார்லிமென்ட் கட்டடத்துக்கு வர வேண்டி இருக்கும். அதனால், 2024லும் புறக்கணிப்போம். அதற்கு முன்னோட்டமாக இப்போது புறக்கணிக்கிறோம்' என, தி.மு.க., அறிவித்து வீரசபதம் எடுத்தால் நன்றாக இருக்கும்.

அது சரி... 2024ல், மத்திய அமைச்சர் ஆகணும்னு வலம் வர்றவங்க கனவுல, ஒரு லாரி மண்ணை அள்ளி போடுறாரே!

தமிழக பா.ஜ., பொருளாளர், எஸ்.ஆர்.சேகர் அறிக்கை

: கர்நாடகாவில் இல்லந்தோறும், 200 யூனிட் மின்சாரம் இலவசம் எனக்கூறிய காங்கிரஸ், தற்போது விதித்துள்ள நிபந்தனைகளை பார்த்தால், ஊருக்கு நாலு வீடு கூட தேறாது. குடும்பத்துக்கு, 1,000 ரூபாய், டாஸ்மாக் ஒழிப்பு என, கனிமொழி, ஸ்டாலின், உதயநிதி பேசியது மற்றும் கொடுத்த உறுதி மொழிகள் தான், நமக்கு ஞாபகத்திற்கு வருகின்றன.

இவங்களுடன் கூட்டணி வச்சதால தான், இப்படி எல்லாம் போலி வாக்குறுதி குடுத்து, ஆட்சியை பிடிக்கலாம் என்ற ஐடியாவே காங்கிரசாருக்கு வந்திருக்குமோ?

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:

தாங்க முடியாத கடும் வெயில் மற்றும் கொரோனா தொற்று பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில்,தமிழக அரசு அவசர அவசரமாக பள்ளிளை திறந்து, மாணவ - மாணவியரை வாட்டி வதைக்க முனைவது கண்டனத்துக்குரியது.

தமிழக கைத்தறித் துறை அமைச்சர் காந்தி பேட்டி: இந்தியாவிலேயே குஜராத்துக்கு பின் தமிழகம், இரண்டாவது இடத்தில் உள்ளது என, கூறிய நிலையில், தற்போது, குஜராத்தை மிஞ்சும் அளவிலான

மூலக்கதை