பெருமையான தருணம் - சன்னி லியோன்

தினமலர்  தினமலர்
பெருமையான தருணம்  சன்னி லியோன்

பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்தியா சார்பில் பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகி உள்ள கென்னடி படம் அங்கு திரையிடப்பட்டது. இதில் அனுராக் உடன் நாயகன் ராகுல் பட் மற்றும் சன்னி லியோனும் பங்கேற்றனர். பிங்க் நிற கவுன் அணிந்து சிவப்பு நிற கம்பளத்தில் ஒய்யாரமாக நடை போட்டார் சன்னி லியோன்.

இந்த விழாவில் பங்கேற்றது பற்றி சன்னி லியோன் கூறுகையில், ‛‛இந்திய சினிமாவைப் நானும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன். எனது சினிமா வாழ்க்கையில் இதுவரைக்குமான பெருமையான தருணம் இது. இதற்காக இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு நன்றி சொல்கிறேன். பெரும்பாலும் என்னை ஆபாச பட நடிகை என்பர். இனி என்னை அப்படி கூற முடியாது. சினிமாவுக்குள் நான் வர பெரிய தடை இருந்தது. தொடர்ந்து மிரட்டல்கள் வந்தன. கொலை செய்து விடுவதாக கூட மிரட்டினர்'' என்றார்.

மூலக்கதை