சிங்கப்பூர் - மதுரை நேரடி விமானம் சேவை: முதல்வர் ஸ்டாலினிடம் அந்நாட்டு உள்துறை அமைச்சர் கோரிக்கை

தினமலர்  தினமலர்
சிங்கப்பூர்  மதுரை நேரடி விமானம் சேவை: முதல்வர் ஸ்டாலினிடம் அந்நாட்டு உள்துறை அமைச்சர் கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கோலாலம்பூர்: சிங்கப்பூர் சென்ற முதல்வர் ஸ்டாலினிடம், 'சிங்கப்பூர் - மதுரை நேரடி விமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு' அந்நாட்டு உள்துறை அமைச்சர் சண்முகம் கோரிக்கை விடுத்தார்.

அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக பல்வேறு நிறுவன அதிகாரிகளை சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் முன்னணி தொழில் நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்களுடன் நேற்று (மே 24) ஆலோசனை நடத்தினார். பின்னர் முதலீட்டாளர்களுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னணியில் கையெழுத்தாகின.

இந்த நிலையில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்தை இன்று சந்தித்து பேசினார். அப்போது, சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினிடம் உள்துறை அமைச்சர் சண்முகம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு, விமான சேவை தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இச்சந்திப்பை அடுத்து விமான நிலையம் கிளம்பினார் ஸ்டாலின். அங்கிருந்து ஜப்பான் புறப்படுகிறார்.

கோலாலம்பூர்: சிங்கப்பூர் சென்ற முதல்வர் ஸ்டாலினிடம், 'சிங்கப்பூர் - மதுரை நேரடி விமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு' அந்நாட்டு உள்துறை அமைச்சர் சண்முகம் கோரிக்கை விடுத்தார்.அரசு

மூலக்கதை