அமெரிக்க பார்லி கூட்டத்தில் பிரதமர் மோடி உரை: அமெரிக்க எம்.பி.,க்கள் கோரிக்கை

தினமலர்  தினமலர்
அமெரிக்க பார்லி கூட்டத்தில் பிரதமர் மோடி உரை: அமெரிக்க எம்.பி.,க்கள் கோரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்க பார்லிமென்ட்டின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை உரையாற்ற அழைக்க வேண்டும் என பிரதிநிதிகள் சபையின் தலைவர் கெவின் மெக்கர்த்திக்கு, எம்.பி.,க்கள் ரோ கண்ணா மற்றும் மிச்சல் வால்ட்ஜ் ஆகியோர் கடிதம் எழுதி உள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் வரும் ஜூன் 22ல் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டிற்கு செல்ல உள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். மோடியின் இந்த பயணம் மூலம், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நெருக்கமான உறவை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கும் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

இந்நிலையில், ரோ கண்ணா மற்றும் மிச்சல் வால்ட்ஜ் ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: அமெரிக்காவின் முக்கிய பங்குதாரர் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் பார்லி கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற பிரதமர் மோடியை அழைப்பது குறித்து நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும்.

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று வருகை தரும் நிலையில், பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில் உரையை வழங்குவது உலகின் பெரிய ஜனநாயகத்தின் மிகப்பெரிய தலைவரை கவுரவிப்பதாக அமையும். 21ம் நூற்றாண்டில் சீனாவை எதிர்கொள்வதில், நமக்கு இந்தியா மிகப்பெரிய கூட்டாளியாக இருக்கும். சர்வதேச பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை வர்த்தகம், முதலீடு மற்றும் இணைப்புகள் மூலம் இந்தியா அமெரிக்கா இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளன.

இந்தியா பசிபிக் பிராந்தியத்தில், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ந்து வரும் வளர்ச்சிக்கான இடமாக மாற்றுவதில் முக்கிய கூட்டாளியாகவும், சர்வதேச சக்தியாகவும் இந்தியா உருவாவதை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

வாஷிங்டன்: அமெரிக்க பார்லிமென்ட்டின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை உரையாற்ற அழைக்க வேண்டும் என பிரதிநிதிகள் சபையின் தலைவர் கெவின் மெக்கர்த்திக்கு, எம்.பி.,க்கள் ரோ

மூலக்கதை