உலக பொருளாதாரத்தில் பிரகாசமாக திகழும் இந்தியா: சிட்னியில் பிரதமர் மோடி உற்சாக உரை

தினமலர்  தினமலர்
உலக பொருளாதாரத்தில் பிரகாசமாக திகழும் இந்தியா: சிட்னியில் பிரதமர் மோடி உற்சாக உரை

சிட்னி: இந்தியா உலகப் பொருளாதாரத்தில் பிரகாசமான நாடாக திகழ்கிறது என சிட்னியில் 20 ஆயிரம் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி, சிட்டினியில் 20 ஆயிரம் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது மோடி மோடி எனக் கோஷத்துடன் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் வரவேற்பு அளித்தனர்.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: நிகழ்ச்சியில் சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்றது மகிழ்ச்சி. 9 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியா வருவது மகிழ்ச்சி. இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவு எரிசக்தி, பொருளாதாரம், கல்வி அடிப்படையிலானது என்றும் சிலர் கூறினர். வெவ்வேறு காலகட்டங்களிலும் இது உண்மையாக இருந்திருக்கலாம்.

இந்தியா-ஆஸ்திரேலியா உறவு பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையால் உருவானது. விளையாட்டு, உணவு, மசாலாக்கள் என பல அம்சங்கள் இந்தியா-ஆஸ்திரேலியாவை இணைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி என பல தரப்பு மக்கள் ஆஸ்திரலேியாவில் வசிக்கின்றனர்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே கிரிக்கெட் உறவு 75 வருடங்களை நிறைவு செய்துள்ளது. கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் போட்டியைப் போலவே, களத்துக்கு வெளியேயும் எங்களது நட்பு சுவாரஸ்யமானது. இந்தியாவில் வளங்களுக்கு பஞ்சமில்லை. இன்று உலகின் மிகப்பெரிய மற்றும் தொழிற்சாலைகள் கொண்ட நாடாக இந்தியாவில் உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற இலக்குடன் இந்தியா முன்னேறி வருகிறது. இந்தியா உலகப் பொருளாதாரத்தில் பிரகாசமான நாடாக திகழ்கிறது.

கொரோனா தொற்று நோய்களில் உலகின் அதிவேக தடுப்பூசி திட்டத்தைச் செய்த நாடு இந்தியா. இன்று உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேனில் புதிதாக இந்திய தூதரகம் அமைக்கப்படும். ஆஸ்திரேலிய கிரக்கெட் வீரர் ஷேன்வார்ன் இறந்த போது ஏராளமான இந்தியர்களும் துயரமடைந்தனர். பல நாடுகளில் வங்கி அமைப்புகள் சிக்கலில் உள்ள நிலையில் இந்திய வங்கிகளின் வலிமை பாராட்டப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

சிட்னி: இந்தியா உலகப் பொருளாதாரத்தில் பிரகாசமான நாடாக திகழ்கிறது என சிட்னியில் 20 ஆயிரம் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.nsimg3328426nsimgஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி,

மூலக்கதை